Wednesday, 7 January 2015
கடலில் தவிக்கும் கார்கள்
1, 400 ஜாகுவார் எஃப் டைப் கார்கள், 65 மினிகூப்பர், ரோல்ஸ்ராய்ஸ் என்று மொத்தம் 1,600 சொகுசு கார்களின் உயிர், இப்போது இங்கிலாந்து கடலில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
‘இவ்வளவு பெரிய பில்டப் எதுக்கு? கப்பலா கவுந்துடுச்சு?’ என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான்.
இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டன் துறைமுகத்திலிருந்து, 50,000 டன் எடை கொண்ட அந்தப் பிரம்மாண்டமான கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியது. பயணம் தொடங்கி சரியாக 20 நிமிடங்களில் அந்த விபத்து நேர்ந்தது கப்பலுக்கு. 45 டிகிரி கோணத்தில் தடாலென தரை தட்டி அந்தக் கப்பல் சாய ஆரம்பிக்க, அதிலுள்ள 25 மாலுமிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், கப்பலில் பயணம் செய்த சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்கள், இப்போது உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. கப்பலின் கேப்டன் அருகிலிருந்த தீவு ஓரமாகவே கப்பலைச் செலுத்தியதால், கப்பல் தரை தட்டியது என்கிறார்கள்.
ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லது என்னவென்றால், 'கப்பல் தரை தட்டினாலும், முழுதாகக் கவிழ வாய்ப் பில்லை; எனவே, கார்களைக் கூடிய விரைவில் சேதாரமில்லாமல் காப்பாற்றி விடலாம்' என்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.
இருந்தாலும், கப்பல் கவிழ்ந்ததால் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கின்றன கார் நிறுவனங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment