Sunday, 15 March 2015

டிராபிக் ராமசாமிக்கு ட்விட்டரில் பெருகும் ஆதரவுக் குரல்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஆதரவுக் குரல் பெருகியவண்ணம் உள்ளது.
இதற்காக, #WeStandWithTrafficRamasamy என உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக், சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி முன்னிலை வகித்துள்ளது.
டிராபிக் ராமசாமி மீதான நடவடிக்கையை விமர்சித்து பலரும் ட்விட்டர் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அத்துடன், டிராபிக் ராமசாமி இதுவரை சமூக ஆர்வலராக மேற்கொண்ட செயல்பாடுகளை அவர்கள் நினைகூர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்ததும் சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து, டிராபிக் ராமசாமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடனடியாக அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 9 மணி அளவில் டிராபிக் ராமசாமி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அதிகாலையில் கைது செய்து சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது நினைகூரத்தக்கது.

Friday, 6 March 2015

சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி வாதம் நிறைவு: திங்கட்கிழமை ஆவணங்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு

 AMMA COME OR NOT

NEXT WEEK EXPECTING JUDGEMENT DATE ANNOUNCEMENT BY KARNATAKA HIGH COURT.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதி குமாரசாமி முன்பு 38 வது நாளாக நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 6-வது நாளாக வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார். மேலும், வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், சொத்துக்கள் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாகவும், அரசியல் எதிரிகளால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். எனவே, ஊழல் தடுப்பு சட்டம் 13 பிரிவு 1E - ன் கீழ் இந்த வழக்கை தொடர முடியாது என்றும் நாகேஸ்வரராவ் கூறினார். இந்நிலையில், அரசு வழக்கறிஞருக்கு உதவியாக எழுத்துப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்ய சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 42 பக்கம் கொண்ட ஆவணங்களை அவர் நாளை மறுநாள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று, ஜெயலலிதா தரப்பில், செவ்வாய்கிழமை எழுத்துப்பூர்வ ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதி குமாரசாமி வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Former Tamil Nadu Chief Minister Jayalalithaa's appeal against Special Court's conviction order in disproportionate assets case was filed in the Karnataka High Court around 11 a.m on Monday.
Her advocates filed the appeal, with a plea seeking suspension of sentence, in the High Court's registry section.
Jayalalithaa’s aide Sasikala, her relatives V.N Sudhakaran and Ilavarasi also approached the High Court, seeking bail.
Senior Supreme Court advocate Ram Jethmalani will represent Jayalalithaa with the defence team. Earlier on Sunday, the legal team discussed options to get the sentence suspended and the conviction stayed, party sources said.
Legal experts say a stay on the conviction is deemed necessary to get her disqualification suspended. While the Supreme Court has said in many cases that the appellate court has the power to suspend both the sentence and conviction, it laid down in 2001 that when a public servant has been convicted for corruption, the conviction should not be stayed during the pendency of an appeal.
Since the High Court was on vacation, the application may be taken up by a vacation bench on Tuesday.