திருச்சி: ஸ்ரீரங்கம் தேர்தல்
பிரசாரத்தின்போது டிராபிக் ராமசாமிக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே
மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்
போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக வளர்மதியை ஆதரித்து அ.தி.மு.க கொள்கை
பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று மாலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்
அருகில் திறந்த ஜீப்பில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி
முடிந்ததும் அந்த வழியாக சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி காரில்
வந்தார். அவரது இயக்கத்தின் கொள்கைகளுடன் கூடிய பதாகைகள், சின்னம், கொடி
கட்டிய ஒரு ஜீப்பும் உடன் வந்தது.
அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்த இடம் அருகில் வந்த போது டிராபிக் ராமசாமியின் கார் திடீரென பழுதாகி நின்றுவிட்டது. இதனால் அவர் காரை விட்டு இறங்கி டிரைவரின் உதவியுடன் பேனட்டை திறந்து பார்த்து கொண்டு நின்றார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட ஜீப் மற்றும் காரை அப்புறப்படுத்து என கோஷம் போட்டதோடு, டிராபிக் ராமசாமி முன்னால் நின்று கொண்டு, "ஜெயலலிதா வாழ்க... ! இரட்டை இலைக்கே எங்கள் ஓட்டு...!" என்றும் கோஷம் போட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிராபிக் ராமசாமி, அப்போது
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் "தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி
அ.தி.மு.க.வினர் 100க்கும் மேற்பட்ட கார்களில் பவனி வந்து இருக்கிறார்கள்.
இதனை நான் வீடியோ எடுத்து ஆதாரமாக வைத்து இருக்கிறேன். இதுகுறித்து புகார்
செய்கிறேன் நடவடிக்கை எடுங்கள்" என்றார்.
இதனால் அ.தி.மு.க.வினருக்கும், டிராபிக் ராமசாமி மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க தொண்டர்கள் டிராபிக் ராமசாமியின் ஜீப்பை அந்த இடத்தை விட்டு உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கோஷம் போட்டனர். ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் நின்று வார்த்தைகளால் மோதிக்கொண்டதால் பெரும் பரப்பு ஏற்பட்டது. அவர்களிடையே கைகலப்பு ஏற்படாமல் தடுக்க இரு தரப்பினரையும் காவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தேர்தல் பிரசாரத்தின்போது டிராபிக் ராமசாமிக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.