Breaking News
Wednesday, 15 April 2015
Sunday, 15 March 2015
டிராபிக் ராமசாமிக்கு ட்விட்டரில் பெருகும் ஆதரவுக் குரல்
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஆதரவுக் குரல் பெருகியவண்ணம் உள்ளது.
இதற்காக, #WeStandWithTrafficRamasamy என உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக், சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி முன்னிலை வகித்துள்ளது.
டிராபிக் ராமசாமி மீதான நடவடிக்கையை விமர்சித்து பலரும் ட்விட்டர் பதிவுகளை
இட்டு வருகிறார்கள். அத்துடன், டிராபிக் ராமசாமி இதுவரை சமூக ஆர்வலராக
மேற்கொண்ட செயல்பாடுகளை அவர்கள் நினைகூர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி ஹோட்டல்
உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி,
புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு
ஏற்பட்டதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் சென்னை
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது உடலில் சர்க்கரை அளவு
குறைந்ததும் சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை
அளித்து வந்தனர்.
இதையடுத்து, டிராபிக் ராமசாமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து
உடனடியாக அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி,
உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று
உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 9 மணி அளவில் டிராபிக் ராமசாமி பன்னோக்கு
உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர
சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது
என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அதிகாலையில் கைது செய்து
சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது
நினைகூரத்தக்கது.
Friday, 6 March 2015
சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி வாதம் நிறைவு: திங்கட்கிழமை ஆவணங்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு
AMMA COME OR NOT
NEXT WEEK EXPECTING JUDGEMENT DATE ANNOUNCEMENT BY KARNATAKA HIGH COURT.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதி குமாரசாமி முன்பு 38 வது நாளாக நடைபெற்றது.
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 6-வது நாளாக வாதத்தை
முன்வைத்தார். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து
சேர்த்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார். மேலும், வழக்கு தொடர்பான
எழுத்துப்பூர்வ ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது
குறுக்கிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், சொத்துக்கள்
மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாகவும், அரசியல் எதிரிகளால் வழக்கு
தொடரப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். எனவே, ஊழல் தடுப்பு சட்டம் 13 பிரிவு 1E
- ன் கீழ் இந்த வழக்கை தொடர முடியாது என்றும் நாகேஸ்வரராவ் கூறினார்.
இந்நிலையில், அரசு வழக்கறிஞருக்கு உதவியாக எழுத்துப்பூர்வ ஆவணங்களை தாக்கல்
செய்ய சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 42
பக்கம் கொண்ட ஆவணங்களை அவர் நாளை மறுநாள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது.
இதேபோன்று, ஜெயலலிதா தரப்பில், செவ்வாய்கிழமை எழுத்துப்பூர்வ ஆவணங்கள்
தாக்கல் செய்யப்பட உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதி
குமாரசாமி வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Former Tamil Nadu Chief Minister Jayalalithaa's appeal against Special
Court's conviction order in disproportionate assets case was filed in
the Karnataka High Court around 11 a.m on Monday.
Her advocates filed the appeal, with a plea seeking suspension of sentence, in the High Court's registry section.
Jayalalithaa’s aide Sasikala, her relatives V.N Sudhakaran and Ilavarasi also approached the High Court, seeking bail.
Senior Supreme Court advocate Ram Jethmalani will represent Jayalalithaa
with the defence team. Earlier on Sunday, the legal team discussed
options to get the sentence suspended and the conviction stayed, party
sources said.
Legal experts say a stay on the conviction is deemed necessary to get
her disqualification suspended. While the Supreme Court has said in many
cases that the appellate court has the power to suspend both the
sentence and conviction, it laid down in 2001 that when a public servant
has been convicted for corruption, the conviction should not be stayed
during the pendency of an appeal.
Since the High Court was on vacation, the application may be taken up by a vacation bench on Tuesday.
Monday, 2 February 2015
டிராபிக் ராமசாமியுடன் அ.தி.மு.க.வினர் மோதல்: ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு!
திருச்சி: ஸ்ரீரங்கம் தேர்தல்
பிரசாரத்தின்போது டிராபிக் ராமசாமிக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே
மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்
போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளராக வளர்மதியை ஆதரித்து அ.தி.மு.க கொள்கை
பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று மாலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்
அருகில் திறந்த ஜீப்பில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி
முடிந்ததும் அந்த வழியாக சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி காரில்
வந்தார். அவரது இயக்கத்தின் கொள்கைகளுடன் கூடிய பதாகைகள், சின்னம், கொடி
கட்டிய ஒரு ஜீப்பும் உடன் வந்தது.
அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்த இடம் அருகில் வந்த போது டிராபிக் ராமசாமியின் கார் திடீரென பழுதாகி நின்றுவிட்டது. இதனால் அவர் காரை விட்டு இறங்கி டிரைவரின் உதவியுடன் பேனட்டை திறந்து பார்த்து கொண்டு நின்றார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட ஜீப் மற்றும் காரை அப்புறப்படுத்து என கோஷம் போட்டதோடு, டிராபிக் ராமசாமி முன்னால் நின்று கொண்டு, "ஜெயலலிதா வாழ்க... ! இரட்டை இலைக்கே எங்கள் ஓட்டு...!" என்றும் கோஷம் போட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிராபிக் ராமசாமி, அப்போது
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் "தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி
அ.தி.மு.க.வினர் 100க்கும் மேற்பட்ட கார்களில் பவனி வந்து இருக்கிறார்கள்.
இதனை நான் வீடியோ எடுத்து ஆதாரமாக வைத்து இருக்கிறேன். இதுகுறித்து புகார்
செய்கிறேன் நடவடிக்கை எடுங்கள்" என்றார்.
இதனால் அ.தி.மு.க.வினருக்கும், டிராபிக் ராமசாமி மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க தொண்டர்கள் டிராபிக் ராமசாமியின் ஜீப்பை அந்த இடத்தை விட்டு உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கோஷம் போட்டனர். ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் நின்று வார்த்தைகளால் மோதிக்கொண்டதால் பெரும் பரப்பு ஏற்பட்டது. அவர்களிடையே கைகலப்பு ஏற்படாமல் தடுக்க இரு தரப்பினரையும் காவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தேர்தல் பிரசாரத்தின்போது டிராபிக் ராமசாமிக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Friday, 30 January 2015
டில்லி குடியரசு தினவிழாவின் போது
டில்லி குடியரசு தினவிழாவின் போது அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய
பிரதமர் மோடி அமர்ந்திருக்க ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் முன் முன் ஒரு
இளம் விதவை நின்று கொண்டு இருக்கிறார்.
பெருமையோடு அவர் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தாலும் கண்களில் அளவிடமுடியாத சோகம் நிரம்பிக்கிடக்கிறது.
யார் இவர் என தெரிந்து கொள்ளும் முன் இவரது கணவரைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் முகுந்த் வரதராஜன். பி.காம் எம்ஏ ஜர்னலிசம் படித்தாலும் அவரது உறவினர்கள் சிலர் ராணுவத்தில் இருப்பதால் இவருக்கும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.
சென்னையில்
உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளிக்கு நண்பர்கள் சிலருடன்
விண்ணப்பித்தார். இவருக்கு மட்டும் அதில் சேரவாய்ப்பு கிடைத்தது.கடுமையான
பயிற்சிக்கு பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.
ஜம்மு-காஷ்மீரில் பதட்டமான சோபைனா என்ற இடத்திற்கு மேஜராக அனுப்பப்பட்டார். மிகச்சிறப்பாக செயல்பட்டு அங்குள்ள தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
இதற்கு இடையில் தாயகத்திற்கு வந்த போது இந்து ரெபேக்கா வர்கீஸ் என்பவருடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது.இவர்களுக்கு அன்பின் அடையாளமாக அர்ஷியா என்ற 5 வயது மகள் உண்டு.
தேசத்தின் மீது மட்டுமல்ல தனது தந்தை வரதராஜன் தாய் கீதா மற்றும் நண்பர்கள் மீதும் மிகுந்த பாசமும் மரியாதையும் கொண்டவர்.தாயிடம் பேசாமல் ஒரு நாளும் இருக்கமாட்டார்.
2012 ஏப்ரல் 12ம்தேதி முகுந்த வரதராஜனுக்கு பிறந்த நாள் அன்றைய தினம் முழுவதும் அவர் யாருடனும் பேசவில்லை அவரது அப்பா அனுப்பிய குறுஞ்செய்தி பார்த்துவிட்டு ஒரு பெரிய வேலை இருக்கு முடிச்சுட்டு பேசுகிறேன் என்றவர் அதற்கு பிறகு பேசுவதற்கு நேரமே இருக்கவில்லை.
தீவிரவாதிகள் ஒரு இடத்தில் முக்கியமான திட்டத்தோடு முகாமிட்டு இருப்பதை அறிந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களை அவர்களது கோட்டைக்குள்ளேயே போய் கூண்டோடு அழித்து விட திட்டமிட்டு முன்னேறியவர் ஏப்ரல் 25ம்தேதி நெருங்கியும்விட்டார்.
அவர் நெருங்கிவிட்டதை அறிந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தனர் அவர்கள் நடத்திய குண்டு மழைக்கு பயப்படாமல் முன்னேறிய முகுந்த் வரதராஜன் ஒரு கட்டத்தில் ஒரு கட்டிடத்தினுள் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளையும் சுற்றி வளைத்துவிட்டார்.
நேருக்கு நேரான துப்பாக்கி சண்டையில் மூன்று பேரையும் சுட்டுக்கொன்ற முகுந்த் வரதராஜனுக்கு இந்த வெற்றி செய்தியை உரத்த குரலெடுத்து தேசத்திற்கு சொல்லவேண்டும் என்று நினைத்த போதுதான் குரலுக்கு பதிலாக மயக்கம் வந்ததை உணர்ந்தார், கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது அப்போதுதான் கவனித்திருக்கிறார் எதிரிகளின் குண்டுகள் தன்னை துளைத்திருப்பதை...மெல்லிய புன்னகையோடு ஜெய்ஹிந்த் சொல்லியபடி சரிந்தவர் அடுத்த நிமிடம் இறந்தவராகிவிட்டார்.
கண்ணிவெடியில் சிக்கிய போதும், முதுகில் தோட்டா துளைத்த போதும் உயிர்தப்பியவர் இவர். இதை எல்லாம் தனது குடும்பத்தினரிடம் சொல்லி எனது உயிர் கெட்டி அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டேன் அப்படியே இறந்தாலும் யாருமே அழக்கூடாது ஏன் என்றால் எங்களைப் போன்ற ராணுவ வீரனின் மரணம் நாட்டுக்கான கடமையாகும் என்றெல்லாம் குடும்பத்தில் சொல்லி வைத்திருந்தார் .
முகுந்த வரதராஜனின் மரணம் சாதாரணமானது இல்லை அது ஒரு வீரமரணம் என்பதையும் அவரது சாகசமும் வீரமும் ஈடுஇணையில்லாதது எனவும் அவரது அதிகாரிகள் சொல்ல சொல்ல தமிழகமே அவரது நினைவை போற்றியது மின் மயானத்தில் பெருந்திரளாக திரண்டு சென்று அஞ்சலி செலுத்தியது.
31 வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக இன்னுயிர் எனும் தன்னுயிர் கொடுத்த மேஜர் முகுந்த வரதராஜனுக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டு அந்த விருதினை குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி கையில் வாங்குவதற்காகத்தான் இந்து முகுந்த் வரதராஜன் நின்று கொண்டிருந்தார்.
அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த வரதராஜன் மறக்கமுடியாத மறக்ககூடாத மாவீரர் என விருது வழங்கப்பட்ட போது அவரைப்பற்றி ஆங்கிலத்திலும் இந்தியிலும் சொன்னபோது அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரது கண்களும் கலங்கியிருந்தது.

Saturday, 24 January 2015
Subscribe to:
Posts (Atom)